சி. ராதாகிருஷ்ணன்
சி. இராதாகிருஷ்ணன் (C. Radhakrishnan) 1939 பிப்ரவர் 15 அன்று பிறந்து எழுத்தச்சன் என்றும் பரவலாக அறியப்படும் இவர் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் ஒன்றான கேரளாவைச் சேர்ந்த மலையாள மொழி எழுத்தாளர் ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களின்திரைப்பட இயக்குனராகவும் உள்ளார். எழுத்தச்சனின் உண்மையான பெயர் கிருட்டிணன் என்பதாகும். ஆனால் இந்த பெயர் அவரது குடும்பத்தினரைத் தவிர வேறு எவருக்கும் நீண்ட காலமாக மறந்துபோன ஒன்றாகவே இருந்தது.[1]
வாழ்க்கை
[தொகு]சக்குபுரையில் இராதாகிருஷ்ணன், 1939 பிப்ரவரி 15 இல், பிரித்தானிய இந்தியாவின் கீழ் அமைந்த சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த தற்போதைய மலபார் மாவட்டத்திலுள்ள திரூரில் உள்ள சம்ரவட்டம் என்கிற கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் பரப்பூர் மாடத்தில் மாதவன் நாயர் மற்றும் சக்குப்புரை ஜானகி அம்மா ஆவர். எழுத்தச்சன் என்பவர் தனது பரம்பரையில் வாழ்ந்த ஒரு மூதாதையர் என்று அவர் தனது தாத்தா பாட்டிகளிடமிருந்து கேள்விப்பட்டார். இதுவும் அவருக்கு வழங்கப்பட்ட தகவல்களின் பிற விவரங்களும் அவரது படைப்புகளில் ஒன்றை உருவாக்குவதற்கான அடிப்படையை அமைத்தன. துஞ்சத்து இராமானுஜன் எழுத்தச்சனின் வாழ்க்கை வரலாறு, தீக்கடல் கடங்கு திருமதுரம் என்ற பெயரில் வெளிவந்தது.[2] அக்டோபர் 2003 முதல் அக்டோபர் 2004 வரை மாத்ரூபூமி செய்தித்தாளில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இது வெளிவந்தன.[1]
இராதாகிருஷ்ணன் தனது முதல் புதினமான நிழல்பாடுகள் என்ற படைப்பை தனது 21வது வயதில் 1959 இல் முதுகலை பட்டப்படிப்பில் படித்துக் கொண்டிருக்கும்போதே எழுதினார். இந்த புத்தகம் ஆரம்பத்தில் ஒரு பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது, பின்னர் 1962 இல் தற்போதைய பத்திரிகைகளால் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் மாபெரும் வெற்றியை அடைந்தது. இந்த புத்தகம் 1962 இல் கேரள அரசு வழங்கும் கேரள இலக்கிய சாகித்திய அகாதமியின் விருதைப் பெற்றது.[3]
விருதுகள்
[தொகு]சூலை 2014 இல், இராதாகிருஷ்ணன் தனது தீக்கடல் கடங்கு திருமதுரம்" என்ற தனது புதினத்திற்காக 2013 ஆம் ஆண்டிற்கான மூர்த்திதேவி விருதினையும் பெற்றார்.[4][5][6] அவருக்கு 2016 ஆம் ஆண்டிற்கான எழுத்தச்சன் புரஸ்காரம் கௌரவம் வழங்கப்பட்டது.[7][8][9] பிற இலக்கிய அங்கீகாரங்களில் 2015 இல் மாத்ருபூமி இலக்கிய விருது,[10] 2016 இல் கே. பி. கேசவ மேனன் நினைவு விருது,[11] மாதவ முத்ரா, நாலப்பாடன் விருது மற்றும் திரிக்காவு தேவி புரஸ்காரம் ஆகியவை அடங்கும்.
அறிவியல் கட்டுரைகள்
[தொகு]இராதாகிருஷ்ணன் இயற்பியல் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பிரபஞ்சத்தின் பின்னால் உள்ள ரகசியம் என்ற தலைப்பில் இயற்பியல் குறித்த புத்தகம் சூலை 2016 இல் வெளியிடப்பட்டது. இயற்பியலில் ஆசிரியரின் ஆராய்ச்சிகள் சனவரி 2017 இல் பிரஸ்பேஸ்டைம் ஜர்னல் என்ற பத்திரிக்கையில் அவ்யக்தா: தி ஃபேப்ரிக் ஆஃப் ஸ்பேஸ் [12] என்ற தலைப்பில் ஒரு கட்டுரையாக வெளியிடப்பட்டது.
ஸ்கூல் ஆப் பகவத் கீதா என்ற அமைப்பால் வெளியிடப்பட்டு வந்த பைரவி என்ற மலையாள பத்திரிகையின் ஆசிரியராக இராதாகிருஷ்ணன் சில காலம் பணி புரிந்தார். அவர் ஆகஸ்ட் 16, 1999 முதல் செப்டம்பர் 1, 2001 வரை மாத்தியம் நாளேட்டின் முன்னாள் தலைமை ஆசிரியராகவும் சில காலம் இருந்தார்.[13]
தீக்கடல் கடங்கு திருமதுரம்
[தொகு]இராதாகிருஷ்ணன் தனது தீக்கடல் கடங்கு திருமதுரம்" என்ற தனது புதினத்திற்காக ஓடக்குழல் விருது, அமிர்த கீர்த்தி விருது ஞானப்பனா விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். இந்த புதினம் இந்தி மொழியில் அக்னிசாகர் சே அம்ருத் என்ற பெயரில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. எஸ். தங்கமணி அம்மா மற்றும் கே. ஜி. பாலகிருட்டிண பிள்ளை ஆகிய இருவரும் இப்பணியை மேற்கொண்டனர். பாரதிய ஞானபீட புத்தக வெளியீட்டு நிறுவனம் இதை வெளியிட்டது.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 https://c-radhakrishnan.info/theekadal.html
- ↑ "Theekkadal Kadanhu Thirumadhuram". c-radhakrishnan.info. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.
- ↑ ""Nizhalppadukal"". பார்க்கப்பட்ட நாள் 5 August 2018.
- ↑ "Bharatiya Jnanpith". jnanpith.net. Archived from the original on 19 December 2013. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.
- ↑ "Moortidevi Award for C. Radhakrishnan - KERALA - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.
- ↑ "Scientist-turned-writer C Radhakrishnan awarded for his novel 'Theekkadal Katanhu Thirumadhuram'". deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.
- ↑ "Ezhuthachan award for C. Radhakrishnan - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.
- ↑ "Ezhuthachan Puraskaram for C. Radhakrishnan - സി.രാധാകൃഷ്ണന് എഴുത്തച്ഛന് പുരസ്കാരം - News - Books". mathrubhumi.com. Archived from the original on 2 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Ezhuthachan award for C Radhakrishnan - Times of India". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.
- ↑ "C Radhakrishnan selected for Mathrubhumi Literary award | Business Line". thehindubusinessline.com. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.
- ↑ "K P Kesava Menon memorial award for C Radhakrishnan- The New Indian Express". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.
- ↑ "Avyakta: The Fabric of Space | Radhakrishnan | Prespacetime Journal". prespacetime.com. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.
- ↑ "History of Madhyamam". madhyamam.com. Archived from the original on 24 August 2013. பார்க்கப்பட்ட நாள் 29 January 2017.